×

பைக் மீது லாரி மோதி முதியவர் பலி

செய்யூர், ஏப் 17: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சூனாம்பேடு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அபிமன்யு (67). இவர், அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் மணப்பாக்கத்தில் இருந்து மரக்காணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுப்பட்டு அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த கனரக லாரி இருசக்கர வாகனத்தில் வேகமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அபிமன்யு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post பைக் மீது லாரி மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Seyyur ,Abhimanyu ,Manapakkam village ,Soonambedu, Seyyur district, Chengalpattu district ,Dinakaran ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில்...